மரியுபோலில் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வரும் நியோ-நாஜி போராளிகள் குழுவான அசோவ் படைப்பிரிவு, இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு தங்கள் நாடு அனுப்பிய ஆயுதங்கள் என்ன ஆனது என்பது குறித்து ஏதுவும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆயுதங்கள் தவறான நபர்களின் (போராளிகள்) கைகளுக்கு சென்றதாக அமெரிக்கா கருதுவதாக தகவல்கள் வெளியானது.
இதனால், நீண்ட நாட்களாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றிருக்கலாம் என கவலைகள் எழுந்துள்ளது.
தெருவின் பெயரை ‘போரிஸ் ஜான்சன்’ என மாற்றிய உக்ரைன்! அதிர்ச்சியில் ரஷ்யா
இதனிடையே, அசோவ் படைப்பிரிவு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
அசோவ் படைப்பிரிவு, தீவிர வலதுசாரி தொடர்புகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‼️Полк «Азов» продовжує знищувати ворожу техніку pic.twitter.com/1B2RvgKNXE
— АЗОВ (@Polk_Azov) April 19, 2022
இஸ்ரேல் உருவாக்கிய இந்த ஆயுதங்கள் இப்போது அசோவ் படைப்பிரிவு கைகளில் இருப்பதை சமீபத்தில் வெளியான வீடியோ காட்டுகிறது என ஜெருசலம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
குழுவில் இன்னும் முக்கிய நியோ-நாஜிக்கள் உள்ளனர் மற்றும் வெள்ளை மேலாதிக்கக் குறியீட்டைக் கொண்டிருந்தாலும், அசோவ் படைப்பிரிவு சீர்திருத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிஎன்என் மற்றும் பிற ஊடக பகுப்பாய்வு செய்து வருகின்றன.