ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது.
மேலும், விமானப்படையை வலுப்படுத்தும், சீரமைக்க தேவைப்படும் பாகங்களையும் அனுப்பவுள்ளது. கிழக்கு உக்ரைனின் டான்பஸ் பகுதியில் ரஷ்யா படைகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், போர் விமானங்கள், ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய ஜோ பைடன், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளர்.
இருப்பினும், உக்ரைனுக்கு அமெரிக்கா எந்த மாதிரியான விமானங்களை அனுப்புகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. உக்ரைனுக்கு சமீபத்தில் தான் 800 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.