உக்ரைன் வீரர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன், அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தி அவரது உயிரை காப்பாற்றியது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவத்தினர் உக்கிரமாக சண்டையிட்டு கொண்டிருந்த போது, ரஷ்ய வீரரின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டா, உக்ரைன் வீரரின் செல்போன் மீது பாய்ந்து நின்றது.
7.62 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட தோட்டாவில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த அந்த வீரர், போருக்கு மத்தியில் சக வீரரிடம் தோட்டா பாய்ந்திருந்த செல்போனை காட்டி, தனது உயிரை காப்பாற்றியதாக பெருமூச்சு விட்டபடி தெரிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.