நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோருக்கும் உலக வங்கியின் தென்னாசிய பிராந்திய நாடுகளுக்கான உபதலைவரான ஹாட்ரிவிங் ஷாபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிலையான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.