என்ன ராதிகா இதுக்கே இப்படினா… கோபி பத்தி தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : அங்க ஒரு அம்மா தப்பே பண்ணம்மா ஜெயில்ல இருக்காங்க ஆனா பேப்பர்ல உங்க பேரு வந்தது பெரிய விஷயமாக பேசிக்கிட்டு இருக்கீங்க என்ன ராதிகா மேடம் இது உங்களுக்கே ஓவரா தெரியலையா?

விஜய் டிவியின் முக்கிய சீரியல் பாக்யலட்சுமி. கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பு இல்லாமல் மந்தமாக சென்ற இந்த சீரியல் தற்போது சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ராதிகாதான். இந்த சந்தரப்பத்திலேயேயும் கோபி விக்கெட் விழவே இல்லையே.

ராதிகாவின் பிறந்த நாளுக்கு ஆசிரத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி வி உடனே சாப்பாடு கொண்டுவந்த பாக்யாதான் இதற்கு காரணம் என்று சொல்லி போலீஸ் பாக்யாவை பிடித்துக்கொண்டு போய்விட்டது. இந்த விஷயத்தில் பாக்ய தான் தப்பே செய்யவில்லை என்று ராதிகாவிடம் அவ்வளவு எடுத்து சொல்லியும், பாக்யாதான் இந்த தப்பை செய்திருப்பார் என்று நம்பும் ராதிகா பாக்யவிடம் பேசாமல் சென்றுவிடுகிறார்.

இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட கடைக்குட்டி எழில், அம்மாவை காப்பாற்ற பல வழிகளில் முயற்சி செய்து ஒரு வழியாக அம்மா கொடுத்த சாப்பாட்டில் எதுவும் இல்லை யாரோ கொடுத்த லட்டுதான் புட் பாய்சன் ஆகியுள்ளது என்பதை கண்டறிந்துவிட்டார். அந்த ரிப்போர்டை கோர்ட்டில் சப்மிட் செய்து பாக்ய இப்போது வெளியில் வரப்போகிறார்.

இது ஒருபுறம் இருக்க ராதிகா வீட்டில் இருக்கும் கோபியிடம் இந்த ஆசிரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக என் பெயர் பேப்பரில் வந்துள்ளது என்று ராதிக ஃபீல் பண்ணுகிறார். அங்க பாக்யா அம்மா தப்பே பண்ணாம ஜெயில்ல பாத்துருக்காங்க இவ்வளவு நாள் அவங்க கூட பழகிட்டு இப்போ நீங்களே நம்பளலனா எப்படி ராதிகா?

அப்போ பாக்யா மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா எதோ மேலோட்டமாகத்தான் பழககுனீங்களா? இதுக்கே இப்படி இருக்கீங்களே கோபிதான் பாக்யாவின் புருஷன் எனறு தெரிந்தால் எப்படி இருக்கும்? அப்படியே பாக்யா தப்பு செய்திருந்தாலும் தெரிந்து இந்த தப்பு நடந்திருக்குமா? இத்தனை வருஷமா உங்களுக்கு உங்க பொண்ணுக்கும் சாப்பாடு கொடுக்கறாங்க அப்போ எப்படி நம்பிக்கையோ சாப்டீங்க ராதிகா மேடம்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.