ஏன் சந்தாதாரர்களை இழக்கும் நெட்பிளிக்ஸ் – காரணம் இதுதான்!

சில வருடங்களுக்கு முன்னால் உலகின் மிக முக்கியமான அல்லது அதிகம் பயனர்களைக் கொண்ட வீடியோ ஸ்டிரீமிங் தளமாக
நெட்ஃபிக்ஸ்
மாறியிருந்தது. இந்த ஒற்றை வார்த்தை உலகின் மக்களை தன் வசம் கவர்ந்து வைத்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, இந்த தளத்தில் இருக்கும்
நெட்பிளிக்ஸ்
பிரத்யேகத் தொடர்கள், திரைப்படங்கள் தான்.

பல ஆண்டுகளாக தனி காட்டு ராஜாவாகத் திகழ்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் இந்த துறைக்குள் நுழைந்தது. குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து, பயனர்களை தங்கள் வசம் திருப்ப முயன்றது.

இந்த முயற்சியின் விளைவு தான், சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெளிவாக தெரிந்தது. அறிக்கை வெளியிட்ட நெட்பிளிக்ஸ், தாங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தது.

சும்மா ஒரு டீஸ்; பக்கா பிளானில் ரியல்மி – திகைத்து நிற்கும் சியோமி!

பயனர்களை இழக்கும் நெட்பிளிக்ஸ்

இந்த இழப்பு மேலும் தொடரும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிறுவனம் சந்தா திட்டங்களின் விலையை உயர்த்தியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உலகளவில் மக்களை சோதித்து வரும் விலைவாசி உயர்வு சமயத்தில், நெட்பிளிக்ஸ் எடுத்த இந்த முடிவு தவறானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

நெட்ஃபிக்ஸ் இந்த பிரிவில் இனி தனிப்பெரும் நிறுவனமாக இல்லை. நெட்ஃபிக்ஸ் 4K தரத்தில் வழங்கப்படும் சேவைக்கு அதிக விலை வசூலிக்கிறது. நிறுவனம் இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், கணக்கை பிறருடன் பகிர்வதையே பெரிய குற்றமாகக் கருதுகிறது.

வெறும் 49 ரூபாய்க்கு ஓடிடி அணுகல்… களைகட்டும் Tata Play திட்டங்கள்!

ரஷ்யாவில் அதிக பயனர்களை இழந்த நிறுவனம்

NETFLIX
ரஷ்யாவில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்தது. 2022 முதல் காலாண்டில் Netflix, 20.5 லட்சம் புதிய சந்தாதாரர்களை எதிர்பார்க்கிறது. இருப்பினும், இது வெகு தொலைவான இலக்கு என்பது தான் உண்மை.

போருக்கு இடையில் ரஷ்யாவில் வணிகத்தின் இடைநிறுத்தம் காரணமாக மட்டுமே, இதுவரை சுமார் 700,000 சந்தாதாரர்களை நிறுவனம் இழந்துள்ளது. இந்த இழப்பு இல்லாமல், அமெரிக்காவிலும் கனடாவிலும் நிறுவனம் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இது நிறுவனத்தின் விலை மாற்றங்களினால் ஏற்பட்ட நேரடி விளைவு என்று ஓடிடி விரும்பிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த இழப்பு எதிர்பார்த்தது தான் என நெட்ஃபிக்ஸ் கூறுகிறது. இப்போது, பங்குதாரர்களுக்கான குறிப்பில், வருவாய் வளர்ச்சி சற்று குறைந்துள்ளதாக Netflix ஒத்துக் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் – Samsung அளிக்கும் உறுதிமொழி!

கணக்கு பகிர்வை தடுக்க முயற்சி

“பெரும்பாலான குடும்பங்கள் கணக்குகளைப் பகிர்ந்துகொள்வதையும்” “போட்டியையும்” நிறுவனம் தவறு செய்கிறது. சமீபத்தில், Netflix கணக்குப் பகிர்வைப் பணமாக்குவதற்கான வழியை நெட்பிளிக்ஸ் சோதிக்கத் தொடங்கியது. இப்போது, நிறுவனம் அதன் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் நெட்பிளிக்ஸ் கணக்கு இல்லாமல், சேவையை அனுபவித்து வருவதாக நிறுவனம் கூறுகிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என கணக்கை பகிர்வதால், நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

வரும் காலத்தில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் கணக்கு பகிர்தலை பணமாக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக முழு முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது. அதாவது, கணக்கை பகிர்ந்து கொள்ள சிறிதளவு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதற்கான முன்னோட்டத்தையும் சில நாடுகளில் நெட்பிளிக்ஸ் மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.

உங்களுக்குப் பிடித்த ஓடிடி தளம் எது… ஏன் அதை விரும்புகிறீர்கள் என்பது குறித்து கீழே கருத்து தெரிவிக்கலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.