ஒரே நேர்கோட்டில் நான்கு கோள்கள்| Dinamalar

வாஷிங்டன்: வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அறிவியல் தகவல்களை வெளியிடும், ‘லைவ் சயின்ஸ்’ இணையதளத்தில் வெளியாகி உள்ள தகவல்:கடந்த 17ம் தேதி அன்று, வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்துள்ளன. இக்காட்சியை நேற்று முதல் வெறும் கண்களால் காண முடிகிறது. அதிகாலை 5:00 – 6:00 மணி வரையில் இக்காட்சியை காண முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.