சிலருக்கு ஒற்றை தலைவலி ஏற்படும். அதனை சரிசெய்ய பிரசன்ன முத்திரை உதவும். பிரசன்ன முத்திரை எப்படி செய்வது அதன் பலன்கள் என்னெவென பார்போம்.
பிரசன்ன முத்திரை:
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளவும். அதன்பின், பின் கட்டை விரல் தவிர மற்ற விரல்களை மடக்கி இரண்டு கை விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி வைத்துகொள்ளுங்கள். கண்களை மூடி சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
இந்த முத்திரையை மூன்று வேளையும் செய்து வரவும். இந்த முத்திரையை செய்து வந்தால் முடி உதிர்தல், மன இறுக்கம், சளி, உடற்சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.
இந்த முத்திரையை 45 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.