பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மரியா ஷரபோவா 2018 ஆண்டு முதல் பிரிட்டிஷ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்தனர். அதே ஆண்டில் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது மரியா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய மரியா ஷரபோவா இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ’விலைமதிப்பற்ற தொடக்கங்கள். இரண்டு பேருக்கும் சேர்த்து பிறந்தநாள் கேக்கை உண்கிறேன்’ என கூறியுள்ளார்.
மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்க்கையில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தார். டென்னிஸில் 4 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்ற 10 வீராங்கனைகளில் இவரும் ஒருவர். இவர் 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். இதுவரை மரியா, 30 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிசுத்தொகைகளை வென்றுள்ளார்.