பா.ரஞ்சித்தின்
குதிரைவால்
படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மெட்ராஸ் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர்
கலையரசன்
நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குதிரைவால்’.
வித்தியாசமான கதை மற்றும் தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர்களான
மனோஜ்
லியோனஸ் ஜாசன் மற்றும்
ஷ்யாம் சுந்தர்
ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை
இந்த படம்
மேஜிக்கல்
ரியலிசம் என்ற புதிய கதைக்களத்தில் உருவாகி வெளியானது. ராஜேஷ் கதை எழுதியுள்ள இப்படம் வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. இந்த படத்தை பா.ரஞ்சித், தனது
நீலம்
புரொக்டஷன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் கதாநாயகியாக
அஞ்சலி பாட்டீல்
நடித்துள்ளார்.கடந்த மாதம் இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் இந்த படம் புரியவில்லை என்ற நெகட்டிவ் விமர்சனமும் எழுந்தது.
இந்நிலையில் இப்படம் நாளை முதல்
நெட்ஃப்ளிக்ஸ்
ஓடிடித்தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!