காரைக்கால் : காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில், ‘கேப்’ கப்பல்களை கையாளும் வசதி துவக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் போர்ட் பிரைவேட் லிமிடெட் (கே.பி.பி.எல்.,) என்ற தனியார் கப்பல் துறைமுகம் 13ம் ஆண்டுகளாக இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் 13ம் ஆண்டு நிறைவு தினம், துறைமுக தலைமை செயல் அதிகாரி ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்த துறைமுகத்தில் முதல் முறையாக, ‘கேப்’ கப்பலான எம்.வி., பெர்ஜ் மெக்லின்டாக்கை கையாளப்பட்டது.
இதுகுறித்து துறைமுக நிர்வாகம் கூறியதாவது:
‘கேப்’ கப்பலின் நீளம், அகலம் மற்றும் நிலைநிறுத்தப்படும் ஆழம் ஆகியவற்றைப் பொறுத்து, கேப் கப்பல்கள் இந்தியாவில் குறிப்பிட்ட சில துறைமுகங்களில் மட்டுமே கையாளப்படுகின்றன. இத்தகைய பெரிய கப்பல்களைக் கையாளும் திறன், தற்போது காரைக்கால் துறைமுகத்தில் உள்ளது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவை குறைத்து, ஏற்றுமதி – இறக்குமதியாளர்களின் வருவாய் உயர்விற்கு வழிவகுத்து, உலகளவிலான வர்த்தக நடவடிக்கைக்கு பெரிதும் பயன் அளிக்கும்.
காரைக்கால் துறைமுகம் தற்போது இரும்பு தாது, இரும்பு வார்ப்பு கம்பிகள், நிலக்கரி, உரங்கள், மணல், கச்சா சர்க்கரை, கோதுமை, சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் போன்ற பல்வேறு சரக்குகளை கையாள்கிறது.சிறந்த உள்நாட்டு இணைப்பு மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலம், காரைக்கால் துறைமுகம் வரும்காலத்தில் தென்னிந்தியாவில் மிகவும் சிறப்பான துறைமுகமாக மாறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement