அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால், காற்று பட்டால் கூட மரண வேதனை ஏற்படும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
நியூஸ் வீக்கின் படி,
டெக்சாஸைச் சேர்ந்த ரேச்சல் மைரிக் (Rachel Myrick), 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, எட்டு அங்குல செப்புத் தலைப் பாம்பினால் கடிக்கப்பட்டார்.
உணவகத்தின் நுழைவாயிலுக்குள் நுழைந்த பாம்பு அவரது கால்விரல்களில் இரண்டு முறையும், அவரது பாதத்தின் பக்கவாட்டில் ஒரு முறையும் கடித்தது.
அப்போது, கடித்ததால் கடுமையான வலி ஏற்பட்டதால், அவரது செல்போன் மற்றும் பணப்பையை கீழே விழுந்தன. அவரது கால் மற்றும் கணுக்கால் வீங்கியதால், மேரிலாண்ட் வாஷிங்டன் மருத்துவமனையில் ஆன்டி-வெனம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், பாம்பு கடி அல்லது விஷ எதிர்ப்பு, அல்லது இரண்டும் கலந்து complex regional pain syndrome எனும் சிக்கலான வலி நோயால் பாதிக்கப்பட்டார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை லேசாகத் தொட்டால் கூட வலியை ஏற்படுத்தும், அதாவது ஒரு மெல்லிய தூரிகை (soft Brush) அல்லது ஒரு லேசான காற்று கூட அவரது தோல் மீது பட்டால் பெரும் வலியை ஏற்படுத்தும்.
தனது வேதனை குறித்து விவரித்த Myrick, ஒருவர் தனது முழு வாழ்நாளில் அனுபவிக்கக்கூடிய வலியின் 10 மடங்கு வலியை ஒரே நேரத்தில் அனுபவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே வெயிலில் எரிந்ததைப் போல் உணரும் தோல் மீது மணல் அல்லது கண்ணாடித் துண்டுகளை கொட்டி தேய்த்தால் எப்படி இருக்குமோ அதைப்போல் இருப்பதாக விவரித்துள்ளார்.
நரம்பியல் கோளாறுகள் மற்றும் பக்கவாதத்திற்கான தேசிய நிறுவனம் (NIH) படி, CRPS இன் அறிகுறிகளில் தோல் நிற மாற்றம், வெப்பம் அல்லது காயம் ஏற்பட்ட இடத்திற்கு கீழே கை அல்லது காலில் வீக்கம் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான CRPS காயங்கள் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும் நரம்பு இழைகளின் முறையற்ற செயல்பாட்டினால் ஏற்படுவதாக NIH கூறுகிறது.
மேலும், எரியும் தோல் மீது பின்கள் மற்றும் ஊசிகள் கொண்டு அழுத்தும் உணர்வுகளை ஏற்படுத்தும், நரம்பு மீண்டும் வளரும் போது வழக்கமாக மறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
பல்வேறு அறிகுறிகள் காரணமாக CRPS-க்கு சிகிச்சையளிப்பது கடினமாக இருக்கலாம், மற்றும் காலப்போக்கில் அவை மாறலாம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் தற்போது CRPS-ஐ விரைவாக குணப்படுத்த வழி இல்லை என்பது தான்.