இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்திலேயே முடிவடைந்தது.
இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.
2ம் கட்ட உக்ரைன் போர் தொடக்கம்.. 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..!
முதலீடுகள் வெளியேற்றம்
ஏப்ரல் 19 நிலவரப் படி, 5,871.69 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 3980.81 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ரூபாய் நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 10 பைசா அதிகரித்து, 76.40 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 24 பைசா அதிகரித்து, 76.50 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தல்க்கது. அன்னிய முதலீடுகள் வரத்தானது சந்தையில் சற்று குறைந்து வரும் நிலையில், இது 76.20 – 76.80 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம்.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 260.09 புள்ளிகள் அல்லது 0.46% அதிகரித்து, 56,723.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.10 புள்ளிகள் அதிகரித்து, 16,987.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 213.80 புள்ளிகள் அல்லது 0.38% அதிகரித்து, 56,676.95 புள்ளிகளாகவும், நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து, 17,015.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1458 பங்குகள் ஏற்றத்திலும், 512 பங்குகள் சரிவிலும், 83 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளுமே ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதில் நிஃப்டி ஆட்டோ 2% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ கன்சியூம்,அன்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர்,பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், லார்சன், பவர் கிரிட் கார்ப், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், மாருதி சுசுகி,டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்,அல்ட்ராடெக் சிமெண்ட், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், லார்சன், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
10.20 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 514 புள்ளிகள் அதிகரித்து, 56,958.95 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 155.4 புள்ளிகள் அதிகரித்து, 17,114.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices trade higher with sensex above 56,900; focus in L&T infotech, ACC
opening bell: indices trade flat amid volatility, Focus on auto, metal, oil & gas stocks/காளையா? கரடியா? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்.. மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி..!