பெண்களின் ஆடை, அணிகலன்கள் குறித்த கட்டுப்பாடுகளை கழுகுகள்போல கவனித்து விமர்சித்துக்கொண்டிருக்கவே நெட்டிசன்கள் கூட்டம் ஒன்று உள்ளது.
பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வீட்டில் சமீபத்தில் நடந்து முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு முதன் முறையாக வெளியே வந்துள்ள ஆலியா, கரண் ஜோஹரின் `ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள விமானநிலையம் சென்றுள்ளார்.
பிங்க் நிற உடையில் மிகவும் பொலிவுடன் காணப்பட்ட ஆலியா, ஒரு கையில் கையில் ஹேண்ட் பேக் வைத்திருந்தார். புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும்போது, சிரித்துக்கொண்டே ரசிகர்களுக்கு கையசைத்து விடைபெற்றுச் சென்றார். பலரும் இந்தக் காட்சியை சமூக ஊடகத்தில் பதிவிட்டு அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஆனால் சிலர் ஆலியா, குங்குமம் வைக்கவில்லை, மணப்பெண் அணியும் வளையல்களை (chooda) அணியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அவர் கையில் இருக்கும் மெஹந்தி குறைவாக உள்ளது என ட்ரோல் செய்து வருகின்றனர்.
“ஆலியாவின் தாய்வழி மாமா வர முடியாததால், நாங்கள் ஆலியாவை ஒரு கலீராவை (திருமண ஆபரணம்) மட்டுமே அணியச் செய்தோம்; கலீரா இல்லாமல் பஞ்சாபி திருமணத்தை எங்களால் செய்ய முடியாது” என ரன்பீர்-ஆலியாவின் திருமணத்தை நடத்தி வைத்த பண்டிட் ராஜேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.