கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதோடு, வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு புகுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குட்டம்பலம் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த மினி லாரி, முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது, அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரமாக இருந்த வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. லாரி மோதிய வேகத்தில் கேட் தனியாக உடைந்து பறந்தது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், லாரியின் முன்பக்க கண்ணாடியும் தனியாக கழன்று விழுந்தது. ஓட்டுநரும், கிளீனரும் சிறு காயங்களுடன் தப்பினர்