மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
“பா.ஜனதா கட்சியினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தி வேர் ஊன்ற வேண்டும் என்று திட்டமிடுகின்றனர்.
மேலும் அவர்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அவர்களது கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர். இவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துகின்றனர். இதன் அடிப்படையில் கேரள கவர்னராக எச். ராஜாவை நியமிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அரசு முன்னதாகவே பல ஆயிரம் கோடி ரூபாயை உதவியாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த உதவி அந்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கையிலுள்ள தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்”. என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.