கண்ணுார் : ‘ஹிந்துக்கள் தவிர, மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை’ என, கேரளாவில் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கண்ணுார் மாவட்டத்தில், மல்லியோடு பலாட்டு காவு என்ற கோவில் உள்ளது.
இக்கோவிலில், மலையாள புத்தாண்டான, ‘விஷு’ ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ௧௪ம் தேதி முதல் நேற்று வரை, இக்கோவிலில் விஷு கொண்டாட்டம் நடந்தது. ஆனால், கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பலகையில், ‘ஹிந்துக்களை தவிர, வேறு யாரும் கோவிலுக்குள் செல்ல கூடாது’ என எழுதப்பட்டிருந்தது,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ‘கடந்த ஆண்டும், விஷு கொண்டாட்டத்தின் போது, இதேபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது’ என, கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
கண்ணுார் : ‘ஹிந்துக்கள் தவிர, மற்றவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை’ என, கேரளாவில் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.