சந்தானத்தின் 'குளு குளு' படப்பிடிப்பு நிறைவு
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்ன குமார் இயக்கியுள்ள படம் 'குளு குளு' . சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் சந்தானம் 'குளு குளு' படத்தின் டப்பிங் பணிகளை அவ்வப்போது செய்து வந்தார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.