திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் காரணமாக இந்த வழியாக செல்லும் 4 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோட்டயம் வழியாக செல்லும் நீண்ட தூர ரெயில்கள் இன்று ஆலப்புழா வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.அதன்படி எண் 17230 செகந்திராபாத்-திருவனந்தபுரம் சென்ட்ரல் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில்.
எண்16649 மங்களூரு சென்ட்ரல்-நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ், எண் 16382 கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ், எண் 12625 திருவனந்தபுரம்-புது டெல்லி கேரளா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில்கள் ஆலப்புழா வழித்தடத்தில், எர்ணாகுளம் சந்திப்பு, செர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.
கோட்டயம் எற்றாமானூர் பாதையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இந்த வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.