ரஷ்யா – உக்ரைன் போர், சீனா கொரோனா தொற்று, பணவீக்கம், சப்ளை செயின் பாதிப்பு எனப் பல இருந்தாலும் முதலீட்டாளர்கள் நேற்றைய சரிவில் இருந்து வாய்ப்பை தேட துவங்கியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் பல முன்னணி பங்குகளில் இருந்த முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றிய நிலையில், இந்த முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் முதலீட்டை தேடும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை சரிவை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் வாயிலாகப் புதன்கிழமை வர்த்தகம் 400 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது.
Apr 20, 2022 11:17 AM
சென்செக்ஸ் குறியீடு 523.94 புள்ளிகள் உயர்ந்து 56,987.09 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 11:16 AM
நிஃப்டி குறியீடு 156.35 புள்ளிகள் உயர்ந்து 17,115.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 20, 2022 11:16 AM
ஹெச்டிஎப்சி கேப்பிடல் அட்வைசர்ஸ்-ன் 10% பங்குகளை ஹெச்டிஎப்சி அபுதாபி முதலீட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்தது
Apr 20, 2022 11:16 AM
அபுதாபி முதலீட்டு நிறுவனம் சுமார் 184 கோடி ரூபாய் முதலீடு செய்து 10 சதவீத ஹெச்டிஎப்சி கேப்பிடல் அட்வைசர்ஸ் பங்குகளை கைப்பற்றியது
Apr 20, 2022 11:16 AM
4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு எல் அண்ட் டி பங்குகள் 3.9 சதவீதம் சரிவு
Apr 20, 2022 11:16 AM
2வருட உயர்வில் கோல் இந்தியா பங்குகள்
Apr 20, 2022 11:14 AM
கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரையில் சரிவு
Apr 20, 2022 11:14 AM
ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி மாதம் 1.59 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது
Apr 20, 2022 11:14 AM
ஜியோ, வோடபோன் வாடிக்கையாளர்களை இழந்தது
Apr 20, 2022 11:13 AM
Insecticides India பங்குகள் 9 சதவீதம் வரையில் உயர்வு
Apr 20, 2022 11:13 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Apr 20, 2022 11:13 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் அபு ஜானி சந்தீப் கோசலா பேஷன் பிராண்டில் 51 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது
Apr 20, 2022 11:13 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா சரிந்து 76.50 ரூபாயாக உள்ளது
Apr 20, 2022 11:13 AM
அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்ற Cigniti Tech பங்குகள் 3 சதவீதம் உயர்வு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 April 20: brent crude bitcoin gold price larsen toubro infotech tata elxsi results share price
sensex nifty live today 2022 April 20: brent crude bitcoin gold price larsen toubro infotech tata elxsi results share price சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட்..!