மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழும் கெய்ரன் பொல்லார்ட் தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் அந்த அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் உள்ள அவர் விளையாடியதில்லை. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்தியாவில் நடைபெற்ற போடடியில் அவர் விளையாடி இருந்தார்.
34 வயதான பொல்லார்ட் டி20 போட்டிகளில் அதிரடி காட்டும் வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணி அணியை வழிநடத்தினார்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல்.போட்டிகளில் அவர் பங்கேற்று உள்ளார். பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் பொல்லார்ட், இக்கட்டான நிலைகளில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பதால் இந்திய ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி இடம் உண்டு.
இந்நிலையில் முக்கிய ஆலோசனைக்குப் பிறகு, நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என பொல்லார்ட் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றதை நினைத்து பெருமைப் படுவதாகவும், பிரைன் லாரா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…
விராட் கோலிக்கு ஓய்வு தேவை- ரவிசாஸ்திரி கருத்து