சினிமாவில் நடிக்கும் 'கண்ணான கண்ணே' அக்ஷிதா
நடிகை அக்ஷிதா போபைய்யா டிவி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கண்ணான கண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், அக்ஷிதாவுக்கு கன்னடத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 'FIR-6' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ராகவேந்திராவுக்கு ஜோடியாக அக்ஷிதா நடிக்க உள்ளார். இவர் நடிப்பில் வெளியான போலீஸ் திரில்லர் திரைப்படமான 'சீதாராம் பினாய்: கேஸ் நம்பர் 18' தென்னிந்திய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இதுவும் ஒரு போலீஸ் திரில்லர் படமாக அமைய உள்ளது.
கடந்த சில நாட்களாக கண்ணான கண்ணே சீரியலில் அக்ஷிதா ஆக்ஸிடன்ட் ஆகி இருப்பது போல் காண்பிக்கபட்டு அவர் வரும் போர்ஷன்கள் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் படத்தில் கமிட்டாகி இருப்பதால் கண்ணான கண்ணே தொடரில் அக்ஷிதா தொடர்ந்து நடிப்பாரா அல்லது அவரது போர்ஷன்கள் குறைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் படத்தில் கமிட்டாகியுள்ள அக்ஷிதா சீரியலை விட்டு விலகுவதை பற்றி எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.