டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள மசூதி வளாகத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய கட்டுமான பகுதியை டெல்லி நிர்வாகம் இடித்துவருகிறது.
ஹனுமத் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இந்த மசூதி வழியாக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி கலவரம் மூண்டது.
இந்த நிலையில், இந்த மசூதியின் ஆட்சபனைக்குரிய கட்டுமான பகுதிகளை புல்டோசர் வைத்து இடிக்கும் பணி இன்று நடைபெற்றது.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டு ஏழை மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
This is a demolition of India’s constitutional values.
This is state-sponsored targeting of poor & minorities.
BJP must bulldoze the hatred in their hearts instead. pic.twitter.com/ucSJK9OD9g
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2022
இந்த தாக்குதல் அவர்கள் மீதான தாக்குதல் அல்ல, இது இந்திய அரசியல் அமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுபான்மையினர் மீதான தனது காழ்ப்புணர்ச்சியை பா.ஜ.க. கைவிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.