தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, சென்னையில் 103.5 கிமீ தூரம் கொண்ட ஏழு சாலைகளை ‘ஸ்மார்ட் சாலைகளாக’ மாற்றத் திட்டமிட்டுள்ளது. அதாவது, அங்கு நடைபாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம், வாகனத்தின் வேகத்தை மணிக்கு 50 கிமீ ஆக கட்டுப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
இதுதவிர, அந்த சாலைகளில் வைஃபை போல்ஸ், சிசிடிவி கேமராக்கள், தகவல் கியோஸ்க்குகள் மற்றும் போக்குவரத்தை சிறப்பாக நிர்வகிக்க தேவையான பிற வசதிகளும் அமைந்திருக்கும்.
கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜிஎஸ்டி) சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் (ஜிடபிள்யூடி) சாலை, கிராண்ட் நார்தர்ன் டிரங்க் (ஜிஎன்டி) சாலை, உள்வட்டச் சாலை, வேளச்சேரி பைபாஸ் சாலை, மர்மலாங் பாலம்-இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி சாலை ஆகியவை ஸ்மார்ட் சாலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்காக ஆலோசகருக்கு திங்கள்கிழமை ரூ.9 கோடி டெண்டர் விடப்பட்டது என்று தமிழ்நாடு சாலைத் துறை ப்ராஜக்ட் 2வின் (டிஎன்ஆர்எஸ்பி) திட்ட இயக்குநர் பி.கணேசன் தெரிவித்தார்.
டெண்டரை அதிக விலைக்கு வாங்குபவர் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 50 கிமீக்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தகுந்த இடங்களில் சாலை ஹம்ப்ஸ், ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் ஸ்பீட் டேபிள்கள் போன்ற ‘போக்குவரத்தை சீர்படுத்தும்’ நடவடிக்கைகளை பரிந்துரைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் நிலத்தடியில் சரியாக பதிக்கப்படுவதையும், வடிகால் சரியாக சீரமைக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான வழிகளையும் டெண்டர் எடுப்பவர் பரிந்துரைப்பார் என தெரிகிறது.
இதுகுறித்து சாலை பாதுகாப்பு நிபுணர் எம்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “சென்னை சாலைகள் தொடர்பாக கடந்த காலங்களில் டெண்டர் எடுத்தவர்கள் தயாரித்த அறிக்கைகள் பிரச்னைகளை தீர்க்க உதவவில்லை. அவர்களது பரிந்துரைத்த மாற்றங்கள் கோட்பாட்டு கருத்துகளின் அடிப்படையில் இருந்தன. அவை காகிதத்தில் நன்றாக இருக்கும், ஆனால் செயல்ப்படுத்த ஏற்றதாக இருக்காது.
ஒரளவு அனைத்து அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதி தீர்வுகளைக் கொண்டு வர வேண்டும். அவர்களின் திட்ட முடிவு, அடிக்கடி செல்லும் வாகனங்களின் வகையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.