சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிரபல விபச்சார அழகியான பிரியா என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அந்த இளம்பெண் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரியா (25 வயது) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விபச்சார தொழில் செய்யும் பெண் ஒருவருடன் சேர்ந்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பிரியாவின் காதலனான காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இடமும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.