ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றால், தான் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேக்ரான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், புதியவர்கள் பதவிக்கு வரவேண்டும் என எண்ணுபவர்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ள பிரான்ஸ் பிரதமரான Jean Castex, ஆகவே, மேக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், தான் தன் பதவியை ராஜினாமா செய்துவிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரானும், மரைன் லீ பென் என்ற பெண்ணும் போட்டியிடும் நிலையில், முதல் சுற்று தேர்தலில் இருவரும் பெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் சிறிதளவே வித்தியாசம் இருந்தது.
ஆகவே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
மேக்ரான் ஜனாதிபதியானால், தற்போதைய பிரதமரான Castex ராஜினாமா செய்யும் பட்சத்தில், மேக்ரான் தனது அமைச்சரவையில் மாற்றங்கள் செய்து புதிய அமைச்சர்களை பதவியிலமர்த்தலாம்.
இதற்கிடையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான Christine Lagarde என்னும் பெண் Castexக்கு பதிலாக பிரதமராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.