வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளதால், மீண்டும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியில் கோவிட் மூன்றாவது அலை முடிந்து, பரவல் குறைய துவங்கியதும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து 3 நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக டில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக வெளியான தகவல்: டில்லியில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். இதனை மதிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement