டெல்லியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் ஆக்கியுள்ளதுடன், மீறுவோருக்கு ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. சோதனை செய்துகொண்டோரில் தொற்று கண்டறியப்பட்டோரின் விகிதம் நாலரை விழுக்காடாக உள்ளது.