பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எனத் தான் கூறியது யார் மனத்தையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில அலுவலகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பிரதமர் தன்னை விமர்சிப்பவர்களை மூன்று மாதக் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் எனக் கருதிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
பாக்யராஜின் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தான் பேசியது யார் மனத்தையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.