தனுஷுக்கு கிடைக்காதது, ஐஸ்வர்யாவுக்கு கிடைச்சுடுமோ?

சூப்பர் ஸ்டாரின் மகள், நடிப்பு ராட்சசனின் மனைவியாக இருந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளம் வைத்திருக்கிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. அது தான் இயக்குநர் எனும் அடையாளம்.

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு மீண்டும் படங்களை இயக்க முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா.

தனுஷை வைத்து படம் எடுத்துவிட்டார். இதையடுத்து அப்பாவை வைத்து படம் இயக்குவீர்களா என்று ஐஸ்வர்யாவிடம் கேட்கப்பட்டது.

தனுஷுக்கு இருக்கும் ஆசை, ஐஸ்வர்யாவுக்கு இல்லையாமே
அந்த எண்ணமே வரவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அப்பா படத்தை இயக்குவேன் என்று பதில் அளித்தார்.

தலைவர் 170
படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினி. முன்னதாக தலைவர் 170 படத்தை
தனுஷ்
இயக்க, ஐஸ்வர்யாவும், தங்கை சவுந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பார்கள் என்று கூறப்பட்டது.

ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டதால் தலைவர் 170 பட வாய்ப்பு தனுஷுக்கு கிடைக்காது என்கிறார்கள். இதையடுத்து அந்த வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினியை இயக்க வேண்டும் என்கிற தனுஷின் ஆசை நிறைவேறவில்லை. ஆனால் ஆசைப்படாமலேயே அந்த வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைக்கும் போன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.