தன்னை விமர்சிப்போரைக் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளாகப் பிரதமர் கருத வேண்டும் எனத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
பாரதப் பிரதமரின் மக்கள்நலத் திட்டங்கள் – புதிய இந்தியா என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நூலைப் பெற்றுக் கொண்டு பாக்யராஜ் பேசினார்.