இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டது. இதனிடையே, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான டெல்லி அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அறிவுறுத்தி உள்ளார்.