‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘
பீஸ்ட்
‘ படத்தில் நடித்தார்
விஜய்
. கோலிவுட் வட்டாராமே எதிர்பார்த்து கொண்டிருந்த ‘பீஸ்ட்’ படம் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர்
வம்சி பைடிபல்லி
, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், தமன் இசையமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு இப்படியொரு நிலைமையா.?: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்நிலையில் இந்தப்படத்தில்
மைக் மோகன்
விஜய்யின் அண்ணனாக நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. 90 களில் பிரபலமான நடிகராக திகழ்ந்த மோகன் 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரி எண்ரீ ஆகியுள்ள மோகன், விஜய்யுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள மோகன், விஜய் படத்தில் நடிப்பது குறித்து வெளியான தகவலை மறுத்துள்ளார். ‘ஹரா’ படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் மோகன்.
தளபதி தான் MASS; Beast தான் First; ரசிகர்கள் கருத்து!