பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்.
அவர் தனது அதிரடியான பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற தினேஷ் கார்த்திக் விரும்புகிறார். அவரது வயதை பார்க்காமல், அவர் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை பாருங்கள்.
உலக கோப்பை போட்டியில் 6-வது, 7-வது வரிசையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதனை தற்போது
அவர் செய்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக் 2019-ம் ஆண்டு உலக கோப்பைபோட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.