அகர்தாலா : மிசோரம் மாநிலத்தை தொடர்ந்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையில், பா.ஜ., – திரிபுரா மக்கள் முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, தொற்று ஏற்பட்ட பன்றிகளை அழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மாநில விலங்குகள் நல மேம்பாட்டு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:செபாஹிஜலா மாவட்டத்தில், அரசு நடத்தும் பண்ணையில் உள்ள, 60 பன்றிகள் திடீரென இறந்தன.இதையடுத்து, பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தொற்று பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், ஆப்ரிக்க வகை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாநிலத்தில் தொற்று பரவியுள்ள அனைத்து பன்றிகளையும் கொன்று புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அகர்தாலா : மிசோரம் மாநிலத்தை தொடர்ந்து, திரிபுராவிலும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதால், அனைத்து பன்றிகளையும் கொல்ல, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. திரிபுராவில், முதல்வர் பிப்லப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.