திருப்பூர் மாவட்டம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவி நெற்றியில் திருநீறு பூசி கொண்டும், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து கொண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார்.
இதற்கு அப்பள்ளியின் ஆசிரியைகள் 2 பேர் விமர்சித்ததுடன், ஒரு மத கடவுளின் பெயரைக் கூறி அவரை வழிபட வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது.
மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய மாணவி பள்ளிக்கு செல்ல பயந்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் இது குறித்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கல்வி அதிகாரிகளும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவுக்கு வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.