தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் செயின் பறிப்பு.. கோலமாவு வியாபாரி கைது

சென்னை வடபழனியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் விளையாட்டுக் காண்பித்து, கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்ற கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வடபழனி பக்தவச்சலம் காலனியை சேர்ந்த தாமோதரன்- அபிராமி தம்பதியினரின் 3 வயது மகள் கிருத்திகா, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக சைக்கிளில் கோலமாவு வியாபாரம் செய்து வந்த மரியன், சுற்றும்முற்றும் யாரும் இல்லாததை நோட்டமிட்ட பின், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து கழுத்தில் அணிந்திருந்த அரை சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், தப்பிச் செல்ல முயன்ற கோலமாவு வியாபாரி மரியனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.