நான் பாஜக கிடையாது: அந்தர்பல்டி அடித்த இயக்குனர் பாக்யராஜ்..!

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட
பாக்யராஜ்
பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசியுள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியபோது, ‘அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றினார். நான் கர்நாடகத்தில் இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாக பேசுவதை கேட்டு ஆச்சரியப்பட்டேன். பாஜகவுக்கு சரியான தலைவரை தேர்வு செய்துள்ளார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.

பிரதமர் மோடியை விமர்சித்து வருபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்கள் அவரை பற்றி தவறாக பேச மாட்டார்கள். பிரதமர்
மோடி
பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார். பாக்யராஜின் இந்த பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்திவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘தளபதி 66’ படத்தில் மைக் மோகனா.?: வெளியான பரபரப்பு தகவல்..!

இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாக்யராஜ். அதில் மாற்றுத் திறனாளிகளை குறிப்பிட்டு தான் பேசவில்லை என்றும், அவர்கள் நலனில் அக்கறை கொண்டவன் தான் என்றும், யார் மனதெனும் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் பாஜக இல்லை. பெரியார், அண்ணா, கலைஞர் திராவிடத் தலைவர்களை பார்த்து வளர்ந்தவன். தமிழகத்தில் பிறந்து தமிழில் படித்து, தமிழ் சினிமா என்றுதான் வளர்ந்து வந்துள்ளேன். என்னுடைய சினிமாவில் திராவிட இயக்கங்களின் கருத்துகள் இருக்கும். இனியும் அது தொடரும் என்றும் கூறியுள்ளார். பாக்யாராஜ்.

என்னோட INSPIRATION பாக்யராஜ் -பூர்ணிமா பேச்சு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.