டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கும் எலான் மஸ்க் அடுத்தடுத்து பல எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். டிவிட்டர் ஊழியர்கள் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றுவதைச் சற்றும் விரும்பாத நிலையில், முதலீட்டாளர்களுடன் இணைந்து ஈன்ற முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.
3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..!
இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவிற்கு, கைப்பற்றுவதற்கு முன்பாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 டாலர் சம்பளம்
எலான் மஸ்க் தனது டிவிட்டரில், என்னுடைய 43 பில்லியன் டாலருக்கு ஆஃபர்-க்கு டிவிட்டர் நிர்வாகம் ஒப்புதல் அளித்தால், முதல் வேளையாக நிர்வாகக் குழுவில் இருக்கும் அனைவரின் சம்பளத்தையும் 0 டாலராக அறிவிப்பேன். இதன் வருடத்திற்கு 3 மில்லியன் டாலர் சேமிக்க முடியும்.
நிர்வாகக் குழு
தற்போது டிவிட்டர் நிர்வாகக் குழுவில் பிரட் டெய்லர், பராக் அகர்வால், மிமி அலேமேஹோ, ஜாக் டோர்சி, எகான் டர்பன், மார்த்தா லேன் ஃபாக்ஸ், ஓமிட் கோர்டெஸ்தானி, டாக்டர். ஃபீ-ஃபெய் லி, பேட்ரிக் பிச்செட், டேவிட் ரோசன்ப்ளாட், ராபர்ட் ஜோலிக் ஆகிய 11 பேர் உள்ளனர். இவர்கள் பணமாகவும், பங்குகளாகவும் சுமார் 3 மில்லியன் டாலர் தொகையை வருடத்திற்குச் சம்பளமாகப் பெறுகின்றனர்.
43 பில்லியன் டாலர் ஆஃபர்
எலான் மஸ் கொடுத்த 43 பில்லியன் டாலர் ஆஃபரை டிவிட்டர் நிர்வாகக் குழுவில் அதிகளவிலானோர் மறுத்தாலும், உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்பது வருத்தமான செய்தியாக டிவிட்டர் ஊழியர்கள் மத்தியில் விளங்குகிறது.
மாறுப்பட்ட கருத்து
டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இருக்கும் இந்த மாறுப்பட்ட கருத்துக்கு முக்கியக் காரணம் டிவிட்டர் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒற்றுமை சற்று குறைவாகவே உள்ளது. சில முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க தயாராக உள்ளனர், மேலும் சிலர் எலான் மஸ்க்-கிற்கு டிவிட்டரை கொடுத்து அழகு பார்க்கவும் தயாராக உள்ளனர்.
poison pill திட்டம்
இந்நிலையில் டிவிட்டர் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியினர் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க ‘poison pill’ என்னும் முறையைக் கையாள முடிவு செய்துள்ளது. இந்தப் பாய்சன் பில் என்பதை ஷேர்ஹோல்டர் ரைட்ஸ் பிளான் என்றும் அழைக்கப்படும்.
ஆதிக்கம்
இந்த poison pill திட்டம் மூலம் ஏற்கனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் முதலீட்டாளர்கள் கூடுதலான பணத்தை முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றி நிர்வாகத்தில் தங்களது ஆதிக்கத்தை அதிகரித்து நிறுவனத்தின் விற்பனையைத் தடுக்க முடியும்.
வேன்கார்டு
poison pill திட்டம் மூலம் எலான் மஸ்க் பங்கு முதலீடு அறிவித்த உடனே டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியமான முதலீட்டாளரான வேன்கார்டு கூடுதலாக முதலீட்டை பெற்று நிர்வாகக் குழுவில் மஸ்க்-கை காட்டிலும் கூடுதலான பங்குகளைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடைந்துள்ளது.
Elon Musk says $0 salary to Twitter board members if he buys the company
Elon Musk says $0 salary to Twitter board members if he buys the company நா உள்ள வந்தா உங்களுக்குச் சம்பளமே இல்லை.. எலான் மஸ்க் எச்சரிக்கை..! #Twitter