இந்தியாவுக்கு வந்துள்ள பின்லாந்து பொருளாதார விவகார அமைச்சர் மிகா லிந்திலா, தமது நாடு இந்த முறை நேட்டோவில் உறுப்பு நாடாக இணையப் போவதாக தெரிவித்துள்ளார்.
பின்லாந்தும் அதன் அண்டை நாடான ஸ்வீடனும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தால் அதன் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் சில நாடுகள் அமெரிக்காவுடன் கூட்டு சேர்வது குறித்து ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை பின்லாந்து கடுமையாக கண்டிப்பதாக அந்நாட்டு அமைச்சர் மிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.