தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது எதிரே வந்த காரும் மினி பஸ்சும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள்.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயைஅணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பஸ்சில் இருந்த குழந்தைகள் உள்பட 20 பேர் கருகி இறந்தனர். டிரைவர் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.