இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார ரீதியில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை மேம்படுத்த மத்திய அரசு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி பல முக்கியமான திட்டங்களைக் கடந்த 20 வருடமாக அறிவித்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவின் வறுமை அளவுகள் குறித்து உலக வங்கி செய்த ஆய்வில் 2011 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வறுமை அளவு 12.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
பணமதிப்பிழப்பு பற்றி மோடி கூறியது என்ன.. மன்மோகன் சிங் கணித்தது என்ன.. இதோ ஒரு அலசல்..!
நகரத்து வறுமை
இது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜின் ஆக விளங்கும் நகரங்களின் வறுமை அளவு 2 சதவீதம் அதிகரித்துள்ளது பெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
நகரத்து வறுமைக்கு மோடி அரசு 2016ல் அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடை தான் காரணம் என உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக வங்கி அறிக்கை
‘Poverty in India Has Declined over the Last Decade but not as Much as Previously Thought’, என்ற தலைப்பில் பொருளாதார வல்லுனர்களான சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வான் டெர் வெய்ட் ஆகியோர் இணைந்து எழுதிய ஆய்வறிக்கையில், 2011ல் 22.5 சதவீதமாக இருந்த தீவிர வறுமை அளவு, 2019ல் 10.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2004-2011 காலகட்டத்தில் காணப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் கணிசமாகக் குறைவாக உள்ளது.
நகரம், கிராமம்
இந்த ஆய்வறிக்கையில் நகர்ப்புறத்தை விடக் கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அளவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது முக்கியமானதாக விளங்குகிறது. இதேபோல் தான் கொரோனா தொற்றுக் காலத்தில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை நகர்ப்புறத்தை விடக் கிராமப்புறங்களில் சிறப்பாக இருந்தது.
கிராமத்து வறுமை
மேலும் இந்த ஆய்வு காலத்தில் 2019ல் பொருளாதார மந்த நிலையால் கிராமத்து வறுமை அளவு 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதேபோல் 2016ல் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது நகரத்து வறுமை 2 சதவீதம் அதிகரித்துள்ளது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
2016ல் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரே இரவில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத இந்திய நாணயம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது ஏழை மக்களின் வளர்ச்சியை அப்படியே நிறுத்தியது மட்டும் அல்லாமல் பல பாதிப்புகளுக்குத் தள்ளியது.
காகித பணப் புழக்கம்
இதன் எதிரொலியாக இந்தியாவின் ஜிடிபி 2015-16ல் 8.0 சதவீதமாக இருந்த நிலையில் 2018-19ல் 6.8 சதவீதமாகச் சரிந்தது. இதன் பின்பு அடுத்த வருடமே இந்தியாவில் நுகர்வு அதிகமான நிலையில் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் எல்லாம் காற்றில் பறக்கவிட்டு அதிகளவிலான காகித பணத்தைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தது மத்திய அரசு.
கொரோனா காலம்
இதன் பின்பு இந்திய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு 80 கோடி குடும்பங்களுக்கு அளித்த இலவச உணவு மக்களை மீண்டும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளாமல் காப்பாற்றியுள்ளது என ஐஎம்எப் அறிக்கை கூறுகிறது.
ஆனால் பணமதிப்பிழப்பு காலத்திலும் சரி, கொரோனா காலத்திலும் சரி வறுமையின் அளவு வேகமாக மீண்டு உள்ளது இந்தியாவின் பலம்.
Urban poverty rose 2 percent impact by Modi govt demonetisation in 2016 – World Bank
Urban poverty rose 2 percent impact by Modi govt demonetisation in 2016 – World Bank பணமதிப்பிழப்பால் நகரத்து வறுமை அதிகரிப்பு.. உண்மையை உடைத்த உலக வங்கி..!