சென்னை: பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜவ்வரிசிக்கு வணிக குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 30,392 குடியிருப்புகள் வாழ தகுதியில்லாத குடியிருப்புகளாக கண்டறியப்பட்டுள்ளது .மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மேலும், கடலூர் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் 29 ஏக்கரில் ரூ.13 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கு வர்த்தக முத்திரை பதிவு செய்யப்படும்.
வேதிப்பொருள் கலப்படமில்லா ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு பெற ஏதுவாக சேகோசர்வ் ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.