இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட பியூச்சர் குரூப் – ரிலையன்ஸ் ரீடைல் டீல் தொடர்ந்து வழக்குகள் மூலம் தடை பெற்று இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சுமார் 900க்கும் அதிகமான பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைலின் இந்தச் செயல்பாடு கண்டு பியூச்சர் குரூப் மட்டும் அல்லாமல் அமேசானும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது முக்கியமான திட்டத்தைப் பியூச்சர் குருப் முன்வைத்துள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் பியூச்சர் குரூப்-ன் பெரும் சுமை குறைவது மட்டும் அல்லாமல் மீதமுள்ள வர்த்தகத்தை விற்பனை செய்யவோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவோ முடியும். ஆனால் ஒரு பிரச்சனை உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டு பியூச்சர் குரூப் கடைகளைக் கைப்பற்றிய நிலையிலும், கடந்த 19 மாதமாகப் பியூச்சர் குரூப் கடைகளை நிர்வாகம் செய்ய முதலீட்டுத் தொகை ஆகியவற்றை கணக்கிட்டு பியூச்சர் குரூப் தனது மொத்த கடனில் சுமார் 45 சதவீதத்தை ரிலையன்ஸ் பெயரில் மாற்றும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

பியூச்சர் குரூப்
ஆனால் பியூச்சர் குரூப் இத்திட்டத்திற்கு எவ்விதமான பதிலையும் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அளிக்காத நிலையில், பியூச்சர் குரூப்-க்கு கடன் கொடுத்த வங்கிகள் எவ்விதமான உத்தரவாதமும் பெறாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் ரிலையன்ஸ் ரீடைல் தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

28,921 கோடி ரூபாய் கடன்
ஜனவரி 31, 2022 முடிவில் பியூச்சர் குரூப் கீழ் இருக்கும் 19 நிறுவனத்தின் மொத்த கடன் நிலுவை 28,921 கோடி ரூபாய் (வட்டியுடன் சேர்த்து), தற்போது கைப்பற்றப்பட்ட வர்த்தகத்திற்கு இணையாகச் சுமார் 12,612 கோடி ரூபாய் அளவிலான கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாற்ற திட்டத்தை முன்வைத்துள்ளது பியூச்சர் குரூப்.

கடன் செலுத்தும் திட்டம்
மீதமுள்ள 16,309 கோடி ரூபாய் கடனில் 5653 கோடி ரூபாயை ரிலையன்ஸ்-க்கு விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் மூலம் அளிக்கப்படும். 4000 கோடி ரூபாய் அட்ஜெஸ்ட்மென்ட் பிரிவில் வைக்கப்பட்டு உள்ளது. 2755 கோடி ரூபாயை இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் பங்கு விற்பனை மூலம் செலுத்தப்படும்.
Future group plans to transfer 45 percent debt to Reliance retail
Future group plans to transfer 45 percent debt to Reliance retail பியூச்சர் குரூப் திட்டம்.. யோசிக்கும் முகேஷ் அம்பானி.. வங்கிகள் நெருக்கடி..!