ஐதராபாத்: புஷ்பா படம் மூலம் பான் இந்திய ஸ்டாராக மாறியுள்ளார் அல்லு அர்ஜுன். தற்போது புஷ்பா 2வில் அவர் நடித்து வருகிறார். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு பல விளம்பர படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதில் புகையிலை விளம்பரமும் ஒன்று. இதில் நடிக்க கோடிகளில் அவரிடம் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், ‘நான் புகையிலை விளம்பரத்தில் நடித்தால் எனது ரசிகர்கள் தவறான திசைக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதை கண்டிப்பாக செய்ய மாட்டேன்’ என அந்த விளம்பர வாய்ப்பை அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டார். அல்லு அர்ஜுனின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். மற்ற ஹீரோக்களும் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.