முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகச் சேவை பிரிவான ரிவையன்ஸ் ரீடைல் ஈஷா அம்பானி தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஈஷா அம்பானி ஆடை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார்.
இதற்காகப் பல முன்னணி மற்றும் பிரபலமான பிராண்டுகள் உடன் வர்த்தகக் கூட்டணி வைப்பது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றித் தனது பிராண்டாக்கி வருகிறது.
இப்படி முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் ரீடைல் சமீப காலமாகப் பெண்கள் உள்ளாடை வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.
ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம், பெண்கள் உள்ளாடை வர்த்தகப் பிரிவில் முன்னோடியாக இருக்கும் Amante மற்றும் Zivame ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றிய நிலையில், சமீபத்தில் Clovia பிராண்டின் தாய் நிறுவனமான பர்புள் பாண்டா பேஷன்ஸ் நிறுவனத்தின் 89 சதவீத பங்குகளை 950 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது.
பிராண்டட் பெண்கள் உள்ளாடை
கடந்த 10 வருடத்தில் பிராண்டட் பெண்கள் உள்ளாடை விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதைச் சந்தை தரவுகள் காட்டும் நிலையில் இந்தியாவில் மிட் ப்ரீமியம் முதல் ப்ரீமியம் பிரிவில் இருக்கும் இருக்கும் 6 முன்னணி நிறுவனத்தில் 3 நிறுவனத்தை ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ளது Pretty Secrets, Shyaway மற்றும் Enamor ஆகியவை மட்டுமே.
ஆண்கள் உள்ளாடை
இன்று ஆண்கள் உள்ளாடை தயாரிப்பு பிராண்டான ஜாக்கி இந்தியச் சந்தையில் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அதன் தாய் நிறுவனமான பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையும், வளர்ச்சியைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இதேபோன்ற வர்த்தக வளர்ச்சி தான் தற்போது பெண்கள் உள்ளாடை வர்த்தகத்தில் உருவாகி உள்ளது.
தேவையும், வர்த்தகமும்
ஆண்டுகளுக்கு இணையாகப் பெண்களும் தற்போது பெண்களும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கும் நிலையில் பிராண்டட் உள்ளாடைகளுக்கான தேவையும், வர்த்தகமும் அதிகரித்துள்ளது. ஆண்கள் பிரிவில் இந்த வர்த்தக வளர்ச்சி 15 வருடங்களுக்கு முன்னதாக உருவான நிலையில், பெண்கள் பிரிவில் கடந்த 5 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
3 பிராண்டுகள்
இதை உணர்ந்து தான் பன்னாட்டு முதலீட்டாளர்கள் Amante, Zivame, Clovia ஆகிய இந்திய பிராண்டுகளில் அதிகப்படியான முதலீட்டை செய்தது. கொரோனா காலத்தில் இப்பிரிவு வர்த்தகம் மந்தமான நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து 3 முன்னணி பிராண்டுகளையும் கைப்பற்றியுள்ளது.
100 சதவீதம் வளர்ச்சி
2020ல் வெறும் 6 பில்லியன் டாலராக இருந்த பிராண்டட் பெண்கள் உள்ளாடை வர்த்தகம் 2025க்குள் 100 சதவீதம் வளர்ச்சி அடைந்து 11-12 பில்லியன் டாலர் வரையில் உயரும் என ரெட்சீர் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் கணித்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சியில் தற்போது முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த உள்ளது.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ருபா
ஆண்கள் உள்ளாடை பிரிவில் இருக்கும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2022ல் 10.76 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு 45,429.90 ரூபாயாக உள்ளது. இதேபோல் Rupa நிறுவனம் 13.06 சதவீதம் அதிகரித்து 505.20 ரூபாயாக உள்ளது. இந்திய உள்ளாடை வர்த்தகம் பெரிய அளவில் வகைப்படுத்துக துறையாக இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Reliance Retail targets women innerwear market with big plan; Isha Ambani behind it
Reliance Retail targetting women’s innerwear market with big plan; Isha Ambani behind it பெண்கள் உள்ளாடை வர்த்தகத்தை டார்கெட் செய்யும் ரிலையன்ஸ்.. ஏன் தெரியுமா..?