பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…

திறந்தவெளிகளில் மக்கள் நடமாடும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அத்துடன், வெளியாட்களுடன் சம்பந்தப்பட்ட வைபவங்கள், விழாக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று குறிப்பிடுவது, முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற கருத்தல்ல. விசேடமாக வயோதிபர்கள், மற்றும் நோய் தொற்று அவதானம் கூடியவர்கள் தமது பாதுகாப்பிற்காக கடைபிடித்து வந்த சுகாதார ஆலோசனைகளை  கடைபிடித்து செயற்படுவது மிகவும் சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறுவனங்களுக்குள் பிரவேசிக்கும்போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், மற்றும் குறித்த நபரின் விபரங்ளை திரட்டுதல் போன்ற கட்டாய செயற்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இவற்றை முன்னெடுப்பது தவறில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.