ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சட்ட விரோதமாக தனது செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்த வெப்டிசைனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்தவர் ராமமூர்த்தி (29). இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில்
வெப் டிசைனராக பணியாற்றி வந்தார். கொரோனா காலங்களில் வேலை இன்றி சொந்த ஊருக்கு வந்த ராமமூர்த்தி, தனக்கு தெரிந்த இணையவழி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கடந்த 2021-ம் ஆண்டு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனது மொபைல் செயலி மூலம் சட்ட விரோதமாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.
மேலும், தனியார் விளம்பரங்களை பெற்று வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஒளிபரப்பு உரிமம் பெற்ற தனியார் தொலைக்காட்சி அதிகாரிகள் ஹைதாராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஹைதாராபாத் போலீஸாருக்கு, சட்டவிரோத செயலில் ஈடுபட்டது சிவகங்கை அருகே காங்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என தெரியவந்தது.
இதனையடுத்து, ராமமூர்த்தியை கைது செய்த போலீசார், சிவகங்கை குற்றவியல் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக அவரை ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM