உக்ரைனில் மோதலில் கொல்லப்பட்ட மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தாய் கண்ணீர் விட்டு துடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.
உக்ரைனின் புச்சா நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. புச்சா நகரில் பொதுமக்களின் சடலங்கள் சாலையில் கிடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
புச்சா நகரில் ரஷ்ய படைகள் பொதுமக்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதேசமயம், புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.
இந்நிலையில், புச்சா நகரில் சொந்தங்களை இழந்து துயரத்தில் வாடும் மக்களின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், 70 வயதான தாய் ஒருவர், கொல்லப்பட்ட தனது மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்டு துடிக்கிறார்.
இதுதான் ஜனநாயகமா? இதுதான் இலங்கையின் சட்டமா?.. அவமானம்! கொந்தளித்த மஹேல ஜெயவர்தன
70 வயதான Nadiya Trubchninova, தினமும் லிப்ட் கேட்டு சென்று தனது மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
Nadiya Trubchninova, அவரது மகனின் சடலத்தை ஒரு வாரத்திற்கும் மேல் தேடி கண்டுபிடித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்டுள்ள சிலுவையை பிடித்த படி Nadiya Trubchninova உள்ளுக்குள் துடிக்கும் புகைப்படம் காண்பேரை கலங்க வைக்கிறது.