மணமேடையில் இருந்து அறைக்குள் ஓடிய புதுப்பெண்.. அப்புறம் நடந்த விவகாரம் !!

சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது போலீசார் அறிவுரை
  
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இரு குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

பின்னர் திருமணநாளில் மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார். அப்போது மணமேடைக்கு வந்த மணப்பெண்ணின் கழுத்தில் மாலையை போட மாப்பிள்ளையும் கூறிய உறவினர்கள் மாலையை கொடுத்தனர். அப்போது, மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். பிறகு, திடீரென மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார்.

marriage

உறவினர்கள், குடும்பத்தினர் எதுவும் புரியாமல் விழித்தனர். மணமகளை தடுத்து நிறுத்த முயன்றபோதும் முடியவில்லை. மணப்பெண் ரூமுக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதனால் மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. எவ்வளவோ தட்டியும் அந்த பெண் கதவை திறக்கவில்லை. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார்  விரைந்து வந்து பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போதுதான், மணமகளின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது..

மணப்பெண், போலீசாரிடம் தான் இன்னொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறினார்.  பிறகு, இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். ஆனால் அப்போதும், மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

marriage

இறுதியாக, பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேறி ஆரம்பித்தனர். அப்போது போலீசார் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால் தொடக்கத்திலேயே கூறியிருக்க வேண்டும். தற்போது உன்னுடைய செயலால் அந்த இளைஞருக்கும், அவரது குடும்பத்துக்கு பெரும் மனஉளைச்சல் ஏற்படும் என போலீசார்  அப்பெண்ணுக்கு அறிவுரை கூறினர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.